23. அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்
இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி பரிமள சுகந்த நாயகி
தீர்த்தம் கௌதுகாபந்தன தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர், சுந்தரர்
தல இருப்பிடம் திருவேள்விக்குடி, தமிழ்நாடு
வழிகாட்டி மயிலாடுதுறைக்கு அருகே உள்ள குத்தாலத்துக்கு வடகிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில்தான் திருமணஞ்சேரி உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மீ.
தலச்சிறப்பு

Thiruvelvikudi Gopuramகுத்தாலத்தில் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்த பரத மகரிஷியின் மகளாக பார்வதி தேவி அவதாரம் செய்தாள். தக்க பருவம் வந்ததும் சிவபெருமானையே மணக்க வேண்டி கடும்தவம் புரிய, அவரும் காட்சியளித்து பார்வதியை மணந்துக் கொள்வதாக அருள்புரிந்து மறைந்தார்.

அதன்படி திருமணத்திற்கு சிவபெருமான் கணங்களுடன் குத்தாலத்திற்கு அருகில் உள்ள இப்பகுதிக்கு எழுந்தருளினார். பிரம்மதேவன் திருமண வேள்வியை சிறப்பாகச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தார். பிரம்மன் வேள்வி செய்த இப்பகுதி 'திருவேள்விக்குடி' என்று அழைக்கப்படுகிறது. அதனால் இத்தலத்தில் சிவபெருமானும், அம்பிகையும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர்.

Thiruvelvikudi AmmanThiruvelvikudi Moolavarமூலவர் 'கல்யாணசுந்தரேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடை, சிறிது உயரமான பாணத்துடன், லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். அம்பிகை 'பரிமள சுகந்த நாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள்.

அரசகுமாரன் ஒருவனுக்கு நிச்சயித்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குமுன் இறந்துவிட, உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர். அரசகுமாரன் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய, அவர் பூதகணத்தை அனுப்பி பெண்ணை அழைத்து வரச்செய்து திருமண வேள்வியைச் செய்த தலம் என்று தலவரலாறு கூறுகிறது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com